News August 19, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் விளக்கம்

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு இன்று அளித்த பேட்டியில், என்சிசி முகாம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை.என்சிசி முகாம் நடத்தியவர்களின் பின்னணி குறித்து பள்ளி நிர்வாகம் விசாரிக்கவில்லை.என்சிசி முகாம் நடந்த அன்று அங்கிருந்த மானவைகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது .மேலும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடைபெற்றது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார் .

Similar News

News January 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன -18) இரவு 10 மணி முதல் இன்று காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

கிருஷ்ணகிரி: மரண பயத்தை போக்கும் காலபைரவர் கோயில்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கியில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இங்கு மூலவராக காலபைரவர் இருக்கிறார். இங்கு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே இங்கு உள்ள லிங்கத்தைக் காண இயலும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு வழிபடுவது மூலம் மரண பயம், கடன் ஆகியவை நீங்கும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

தளி அடுத்த சரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பல்லவி (14), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர் வயிற்றுவலி, தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஜன-17 வீட்டில் தனியாக இருந்த பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!