News June 1, 2024
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கன அடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சத்தில் இருந்த பாரூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News July 8, 2025
ஓலாவில் வேலை வாங்குவதாக கூறி மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான பணியாணை வழங்கி 56 நபர்களிடம், ரூ.22 லட்சம் மோசடி செய்த மனோ, சதீஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆணைகளுடன் ஓலாவுக்கு வேலைக்கு சென்றபோது, அந்தப் பணி ஆணையை நாங்கள் தரவில்லை என நிறுவனத்தில் கூற, இம்மோசடி அம்பலமானது.
News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் குறித்து கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.
News July 8, 2025
வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT