News January 12, 2025
கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் அன்றைய நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
கிருஷ்ணகிரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளுங்க!
News November 10, 2025
கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி, சூளகிரி, குருபரப்பள்ளி, போச்சம்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நாளை நடைபெறுகின்றன. இதனால், சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம் புளியம்பட்டி & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
News November 10, 2025
கிருஷ்ணகிரியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே <


