News March 27, 2024
கிருஷ்ணகிரியில் தேர்தல் புறக்கணிப்பு

கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த கம்மம் பள்ளி ஊராட்சி, பழையஊர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் பழைய ஊர் கிராம வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் ஊரில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: இனி நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கிருஷ்ணகிரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை விலை நிலவரம்

தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.20-25, உருளை: ரூ.30, வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.60, கத்திரி: ரூ.30, வெண்டைக்காய்: ரூ.50, காலிஃபிளவர்: ரூ.30, பீர்க்கங்காய்: ரூ.50, சுரக்காய்: ரூ.15, பீட்ரூட்: ரூ.30, பாகற்காய்: ரூ.40, கேரட்: ரூ.50, பீன்ஸ்: ரூ.60 என விற்பனை செய்யப்பட்டது.
News January 17, 2026
கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் விலை நிலவரம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.28, உருளை: ரூ.28, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.44, கத்திரி: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.20, சுரைக்காய்: ரூ.24, புடலங்காய்: ரூ.24, பாகற்காய்: ரூ.25, அவரை: ரூ.30, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.


