News August 5, 2024
கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் நாளை மறு நாள் (ஆக 7)அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி சென்ட்ரல் தியேட்டர் அருகே இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கப்படும் என தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.மதியழகன் தெரிவித்துள்ளார். எனவே இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News January 18, 2026
ஓசூர் மக்களின் கனவில் இடி!

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. ஓசூர் வான்வெளிப் பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதைக் காரணம்காட்டி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓசூர் மக்களின் நீண்ட கால விமானப் போக்குவரத்து கனவு & தொழில் வளர்ச்சித் திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.
News January 18, 2026
கிருஷ்ணகிரி சாலையில் கோர விபத்து!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை கிராமத்தை சேர்ந்த ராஜா 29 என்பவர் நேற்று ஜன-17 காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி.17) ’சாலைவிதிகளை கற்றுத்தருவோம் நமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


