News August 8, 2024
கிருஷ்ணகிரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
கிருஷ்ணகிரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரி, சூளகிரி, குருபரப்பள்ளி, போச்சம்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பணிகள் நாளை நடைபெறுகின்றன. இதனால், சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம் புளியம்பட்டி & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
News November 11, 2025
கிருஷ்ணகிரி: கழிவறை தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

மத்தூர் அருகே உள்ள எம். ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் (22) மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு வசந்த் (2) என்கிற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வசந்த் பக்கத்து வீட்டு கழிவறை குழி திறந்து இருந்ததால் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை, உங்கள் போனிற்கு குறைந்த வட்டியில் லோன் வழங்குவதாக SMS வந்தால், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இது போலி நிதி மோசடி ஆகும். அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று பணம் பறிப்பார்கள். மேலும், இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக https://www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 எண்ணை அழைக்கலாம்.


