News November 15, 2025
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 14, 2025
கொடைக்கானல் அருகே பஸ் மோதி இளைஞர் பலி

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்ற போது, வத்தலக்குண்டுவிலிருந்து வந்த தனியார் பஸ்ஸை முந்த முயற்சித்த போது பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 14, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
News December 14, 2025
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே,தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,வரும் டிச.31ம் தேதிக்குள் <


