News August 18, 2025

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: தர்மபுரி மக்களுக்கு எச்சரிக்கை

image

கர்நாடகாவில் காவிரி ஆற்று படுகையில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News December 11, 2025

தருமபுரி: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

image

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க

News December 11, 2025

தருமபுரி: உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் ஒப்படைப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.

News December 11, 2025

தருமபுரி: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் umis.tn.gov.in இதில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!