News July 15, 2024
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த நிதியாண்டில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்து இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை குறிச்சிக்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இத்திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
Similar News
News July 8, 2025
திருப்பூர் திமுகவில் கோஷ்டி பூசல்?

திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகர செயலாளராக இருப்பவர், திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். இவர் இரண்டு திமுக வார்டு கழகச் செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இவரை கட்சி பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News July 8, 2025
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில்!

திருப்பூர் தாளக்கரையில் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
டிகிரி, இன்ஜினியர் படித்தவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருப்பூரில் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு <