News July 15, 2024
காலை உணவுத்திட்டம் துவக்கம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மையனூர் கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, இருவரும் மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டனர்.
Similar News
News July 8, 2025
தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 7, 2025
தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
News July 7, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…