News November 25, 2025
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற மறுப்பதாக ஜாக்டோ ஜியோ சாடியுள்ளது. இந்நிலையில் டிச.11, டிச.12-ல் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டமும், சென்னையில் டிச.27-ல் வேலைநிறுத்த மாநாடும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
வங்கிகள் 4 நாள்கள் தொடர் விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்பு

LIC-ல் 100% அந்நிய முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் 27-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜன.24(4-வது சனிக்கிழமை), ஜன.25, ஜன.26(குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் வங்கிகள் விடுமுறையாகும். 4 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பணப் பரிமாற்றம் பெரும் அளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
News January 23, 2026
மீண்டும் டிரெண்டாகும் #Gobackmodi

PM மோடி தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், #Gobackmodi X தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் தமிழகத்திற்கு வரும்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இதனை டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால், தற்போது கேரளாவில் அரசு, பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து LDF, UDF ஆதரவாளர்களும் #Gobackmodi எனப் பதிவிட்டு வருகின்றனர்.
News January 23, 2026
காத்திருந்து காலத்தை தவற விடுகிறாரா விஜய்?

முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறி TN அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார் விஜய். ஆனால் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது, தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. இருப்பினும் எந்த பெரிய கட்சியும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், விஜய்க்கு இது பின்னடைவுதான் என அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். உங்கள் கருத்து?


