News April 25, 2025

காட்பாடி ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்தது. காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் 15 பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 11, 2025

வேலூர் குடிநீர் தர பரிசோதனை மையம் கலெக்டர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.11) அண்ணா சாலையில் குடிநீர் தர பரிசோதனை மேற்கொள்ளும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 11, 2025

வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (நவ.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் சுபலட்சுமி  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 11, 2025

வேலூர்: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!