News December 15, 2025

காஞ்சி: EB பில் நினைத்து கவலையா??

image

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு<<>> கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

Similar News

News January 25, 2026

காஞ்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர்!

image

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.25) காஞ்சிபுரம் வருகை தருகிறார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். இந்நிகழ்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது.

News January 25, 2026

காஞ்சி: மின் வாரியத்தின் ‘நூதன’ கண்டு பிடிப்பால் அதிர்ச்சி!

image

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்தூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு, மின் வாரியம் நூதன முறையில் பதிலளித்துள்ளது. கம்பி துருப்பிடித்த இடத்தில் ரப்பர் காலணியை நுழைத்து தற்காலிகமாகச் சரிசெய்துள்ளனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் இத்தகைய ஆபத்தான மற்றும் அலட்சியமான செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர்.

News January 25, 2026

காஞ்சிபுரம்: பணிக்குச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், போளிவாக்கத்தைச் சேர்ந்த பிரிந்தா (29) என்ற தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர், நேற்று காலை பணிக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். ஸ்ரீபெரம்பத்தூர் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!