News June 1, 2024
காஞ்சிபுரம்: 1433-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433 ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராமக் கணக்குகளை தணிக்கை செய்திடவும், வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன்னதாகவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
காஞ்சியில் மீன்பிடி உரிமை குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07எண்ணை ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3வருடங்களாக குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியை காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
காஞ்சி மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07 எண்ணம் ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு.