News November 19, 2025
காஞ்சிபுரம்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 20, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று(ஜன.19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மொத்தம் 253 மனுக்கள் வழங்கப்பட்டன. அவைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
News January 20, 2026
காஞ்சிபுரத்தில் பவர் கட்!

ஸ்ரீபெரும்புதுார், மப்பேடு, செங்காடு, உசேன் நகர் விஸ்வநாதகுப்பம் அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ.காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார் குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
காஞ்சிபுரத்தில் இருவர் துடிதுடித்து பலி!

ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்(19), பாலமுருகன்(19). இவர்கள், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று(ஜன.19 வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு பைக்கில் இருவரும் வாலஜா நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரகடம் அருகே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


