News July 15, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<>இந்த லிங்கில்<<>> காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். பாலிசி குறித்து தெரிந்து கொள்ள காஞ்சிபுரம் அதிகாரிகளை (044-27222901, 044-27224600) தொடர்பு கொள்ளுங்கள். <<17027973>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

சித்தியை கொடூரமாக வெட்டி கொலை

image

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!