News April 8, 2024

காஞ்சிபுரம்: தபால் ஓட்டு பெறும் பணி இன்று தொடக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.8) முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட 1039 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 612 பேர் என, மொத்தம் 1651 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்குகளை பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதிய இளம் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News December 17, 2025

காஞ்சிபுரம்: வாஷிங் மிஷின் வெடித்து விபத்து!

image

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(42). இவரது மனைவி ஷியாமளா. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(டிச.16) வாஷிங் மிஷினில் ஷியாமளா துணி துவைத்தபோது திடீரென வெடித்தது. வாஷிங் மிஷின் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே படப்பை போலீசார், தீயணிஅப்புத் துறைக்கு தகவல் அளித்ததும், விரைந்த அவர்கள் தீயை அணைத்தனர்.

News December 17, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!