News June 18, 2024

காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாமில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News January 17, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

image

படப்பை பகுதியில் வண்டலூர், வாலாஜாபாத் செல்லும் சாலையோரம் தயிர் ஏற்றி வந்த வேன் ஒன்று நேற்று முன் தினம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பஸ்ஸில் இருந்த 30 ஊழியர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்த விசாரணையில் பஸ் டிரைவர் போதையில் இருந்தது தெரிய வந்தது.

News January 17, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

மதுரையைச் சேர்ந்தவர் சேகர்(43). கூலித் தொழிலாளியான இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் மூலம் சொந்த ஊர் செல்ல நேற்று முன் தினம் குன்றத்தூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நோக்கி சென்றார். மண்ணிவாக்கம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியது. இதில், படுகாயமடைந்த சேகர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News January 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!

error: Content is protected !!