News August 23, 2025

காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

image

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Similar News

News January 18, 2026

காஞ்சிபுரம் மக்களே அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

image

பொது விநியோக திட்ட சேவைகள், இ-கோர்ட் சேவை, முதலமைச்சர் சிறப்பு மனு, வேலை வாய்ப்பு பதிவு, மின் கட்டணம் செலுத்த, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேட, வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை உள்ளிட்ட அனைத்தும் <>ஒரே லிங்கில் <<>>கிடைக்கும். மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சேவைகளை பெற்று பயன்பெறலாம். தெரிந்தவர்ளுக்கு ஷேர் பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.

News January 18, 2026

காஞ்சிபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின்

image

காஞ்சிபுரத்திற்கு வரும் ஜன. 25 முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News January 18, 2026

காஞ்சி: 12th, டிப்ளமோ, ITI படித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!