News November 14, 2025

காஞ்சிபுரத்தில் 30,644 பேருக்கு இலவச பட்டா!

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் களக்காட்டூர் கிராமத்தில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில், 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி செலவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில், MP க.செல்வம், க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 14, 2025

காஞ்சி பெண்களே.. நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

தமிழக அரசு, பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

News December 14, 2025

காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை டிசம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News December 14, 2025

காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!