News October 17, 2025

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் ஆய்வு

image

வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் இன்று (17.10.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ரவிச்சந்திரன் உள்ளார்.

Similar News

News November 8, 2025

காஞ்சி: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

image

காஞ்சி மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

காஞ்சி: இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ.8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது. இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

காஞ்சி: மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்!

image

காஞ்சிபுரம், சாலவாக்கம், பள்ளிக்கூடம் தெருவில் வசிப்பவர் சேகர். இவரது மகன் சக்திவேல். த‌னியா‌ர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், புதன்கிழமை வேலைக்குச் சென்றவர், வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பாமல், ஒரு மரக்கிளையில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்டதன் பேரில், போலிசார் உடலை மீட்டு சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!