News November 19, 2024
காங்கிரஸ் தலைவரின் நிகழ்ச்சிகள் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ நாளை இரவு 8 மணிக்கு நெல்லைக்கு வருகிறார். 20ஆம் தேதி காலை 9 மணிக்கு அரசு சுற்றுலா மாளிகையில் பொது கணக்கு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். 9:30 மணிக்கு வளர்ச்சி திட்டங்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். மாலை 6:00 மணிக்கு கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Similar News
News December 12, 2025
சுப்பிரமணியபுரத்தில் திமுக பிரச்சாரம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வார்டு கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு திமுக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலர் ஆவுடையப்பன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து திமுக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்.
News December 12, 2025
நெல்லை: ரேஷன் கார்டு இருக்கா.? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கடைகளின் செயல்பாடுகள், தரம் குறித்த புகார் போன்ற மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News December 12, 2025
நெல்லை: மகளை கர்பமாக்கிய தந்தை

நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 27 வயது திருமணமாகாத பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது 65 வயது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


