News April 17, 2024

கவர்னரின் செயலராக நெடுஞ்செழியன் நியமனம்

image

புதுவை கவர்னரின் செயலராக ஐ.ஏ. எஸ். அதிகாரி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை கவர்னரின் செயலராக இருந்த அபிஜித் சவுத்ரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரசின் கலை பண்பாட்டு செயலர் நெடுஞ்செழியன் கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கவர்னரின் செயலர் பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாணிக்கதீபன் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 11, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: புதுச்சேரி முதல்வர் இரங்கல்

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.

News November 11, 2025

புதுவை பல்கலைக்கழகத்துக்கு 470வது இடம்

image

சர்வதேச நிறுவனமான குவாக்கரல்லி சிமண்ட்ஸ் ஆசிய பல்கலைக்கழகம் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசியாவை சேர்ந்த 48 நாடுகளில் இருந்து 1,526 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சர்வதேச அளவில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 30.7 மதிப்பெண்களுடன் 470வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் (2024-25) 18.8 மதிப்பெண்களுடன் 501-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு ஷூக்கள் வழங்க முடிவு

image

புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், புத்தக பை, மதிய உணவு உள்ளிட்டவை வழங்குகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘ஷூக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஷூக்களை வருகிற 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!