News April 3, 2025
கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாணம்11-ந்தேதி

கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 11-ம் தேதி அன்று காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெறும். இதில் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் மணக்கிறார்.பக்தர்களுக்கு SHARE பண்ணவும்.
Similar News
News January 23, 2026
மதுரை : 10th போதும் – மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 23, 2026
மதுரை டூ தஞ்சாவூருக்கு படப்பானியில் சென்ற இதயம்

விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இளைஞரின் குடும்பத்தினர், இதய தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இளைஞர் இதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்ப்பட்டு தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.
News January 23, 2026
மதுரையில் விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலே பலி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ் (26). இவருக்கு வரும் 28ம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்துவிட்டு பேரையூர் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த டிராவல்ஸ் வேன் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை.


