News June 19, 2024

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகவில்லை: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், 5 பேரும் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாகக் கூறப்படுவதை மறுத்தார். அந்தத் தகவலில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 15, 2026

ஏன் ஜன.15 ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது?

image

ஏப்ரல் 1, 1895-ல் இந்திய ராணுவம் நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, கடைசி பிரிட்டிஷ் Commander in chief ஜெனரல் பிரான்சிஸ், 1949 ஜனவரி 15-ல் தான் இந்திய தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பாவிடம் ராணுவத்தை ஒப்படைத்தார். அதனை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ராணுவத்தின் வீரம், தியாகம் போன்றவற்றை நாமும் ஒரு கணம் நினைவுகூர்வோம்.

News January 15, 2026

இந்த வருடத்தின் Netflix பண்டிகை லிஸ்ட்!

image

பொங்கல் திருநாளை இந்த வருடம் தங்களது OTT-ல் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்டை Netflix வெளியிட்டு வருகிறது. சூர்யாவின் 46-வது படம், ரவி மோகன், விஷ்ணு விஷால் என பலரின் படங்களை இந்த வருடம் Stream செய்ய Netflix வாங்கியுள்ளது. #NetflixPandigai என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வெளியிடப்பட்டு வரும் படங்களின் லிஸ்ட்டை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். இதில் எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?

News January 15, 2026

NDA கூட்டணி, சின்னத்தை உறுதி செய்தார்.. விஜய் தரப்பு அப்செட்!

image

புதுவையில் புதிதாக கட்சி தொடங்கிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் <<18864228>>நேற்று NDA கூட்டணியில்<<>> இணைந்தார். இது, NR ரங்கசாமியுடன் விஜய்யின் தவெக இணைய முட்டுக்கட்டையாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், ஜோஸ் சார்லஸ் மார்டினின் மைத்துனரான ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், இன்று, NDA கூட்டணியில் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை LJK-வுக்கு ஒதுக்கவும், தாமரை சின்னத்தில் போட்டியிடவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!