News November 14, 2025
கள்ளக்குறிச்சி: HORN அடித்ததற்கு கொலை மிரட்டல்!

தாவடிப்பட்டையைச் சேர்ந்த அப்பாஸ் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.13) பேருந்தில் கரடிசித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஆட்டோ ஓட்டி சென்ற ராஜபாண்டி, சஞ்சய் இருவரும் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பாஸ் Horn அடித்ததற்காக, பேருந்தை மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமியை நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் நகை பறிப்பு!

கள்ளக்குறிச்சி: கரடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (35), தனது மனைவியுடன் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். மகள் கீர்த்தனா (12) மட்டும் தனியாக இருந்த போது, வந்த மர்மநபர் அம்மா கடன் தொகையை பீரோவில் வைத்துள்ளார், எடுத்து கொடு என கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, பீரோ சாவியை அவரிடமே கொடுத்த நிலையில், 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!