News November 26, 2025
கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
கள்ளக்குறிச்சி: +12, ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 18, 2026
கள்ளக்குறிச்சி: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <
News January 18, 2026
கள்ளக்குறிச்சி: தோட்டம் அமைக்க அரசே செலவு ஏற்பு!

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <


