News September 3, 2025
கள்ளக்குறிச்சி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல், இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News November 11, 2025
பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் 88,630 பயனாளிகள் பயன்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் நலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 88,630 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ.11) அறிவிக்கப்பட்டுள்ளது


