News August 22, 2025
கள்ளக்குறிச்சி: நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் நாககுப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.
Similar News
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: பீகார் கொள்ளையர்களால் அதிர்ச்சி!

சின்னசேலம்: வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம், பீகாரைச் சேர்ந்த 3 பேர் வீட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கு ஏதும் இல்லாத நிலையில், பக்கத்து வீடான காமராஜ் என்பவரது வீட்டின் மொட்டைமாடி வழியாக உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது காமராஜ் மனைவி கூச்சலிட்டதால், 3 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News January 17, 2026
கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசையால் முதியவர் தற்கொலை!

மணலூர்பேட்டையை சேர்ந்த கண்ணன் (68), தனது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகன் அவரது வயதை காரணம் காட்டி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு முதல் நாளை (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


