News October 17, 2025

கள்ளக்குறிச்சி: நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து!

image

கள்ளக்குறிச்சி, சின்னக்குப்பத்தை சேர்ந்த சுதா நேற்று தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்கு, சின்னக்குப்பம் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுந்தரராஜன் என்பவரது கார் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் சுந்தரராஜன் மீது திருநாவலூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 14, 2025

கள்ளக்குறிச்சி: HORN அடித்ததற்கு கொலை மிரட்டல்!

image

தாவடிப்பட்டையைச் சேர்ந்த அப்பாஸ் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.13) பேருந்தில் கரடிசித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஆட்டோ ஓட்டி சென்ற ராஜபாண்டி, சஞ்சய் இருவரும் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பாஸ் Horn அடித்ததற்காக, பேருந்தை மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 14, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

3,04,886 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 3,04,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 337 வாக்குசாவடி நிலைய அலுவலர்களும்,34 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3-வது சுற்றாக பொதுமக்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!