News October 10, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
Similar News
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
3,04,886 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 3,04,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 337 வாக்குசாவடி நிலைய அலுவலர்களும்,34 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3-வது சுற்றாக பொதுமக்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


