News June 19, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் மறுப்பு

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News January 15, 2026

கள்ளக்குறிச்சியில் 320 போலீசார் குவிப்பு!

image

பொங்கல் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, நாளை திருவள்ளுவர் தினம், நாளை மறுநாள் காணும் பொங்கல், அதைத்தொடர்ந்து 19-ந்தேதி ஆற்றுத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

News January 15, 2026

கள்ளக்குறிச்சி: கணவன் தொல்லையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

கள்ளக்குறிச்சி: மனைவிக்காக சென்ற கணவன் துடிதுடித்து பலி!

image

கூத்தக்குடியை சேர்ந்த அலெக்சாண்டர் (35), தனது மனைவியை கூப்பிட நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (17) & 2 பேர் வந்த பைக், அலெக்சாண்டர் பைக் மீது மோதியது. இதில் அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!