News October 19, 2025

கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 12, 2025

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் நேற்று(டிச.11) தொடங்கினார்.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தமா..?

image

பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் நாளை (நவ.13) தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!