News August 6, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் இன்று (நவ.12) துவக்கி வைத்தார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் இணைந்து போட்டிகளை நடத்தி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: ஓடும் பேருந்தில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் இழப்பு!

திருக்கோவிலூர் அருகே வேலூர்-திருச்சி புறவழிச் சாலையில், நள்ளிரவில் சொகுசு பேருந்தில் தனது நண்பர்களுடன் பயணம் செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்திலியே உயிரிழந்தார். இதனை அறிந்த நண்பர்கள் அருகில் உள்ள திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


