News December 15, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், இன்று பெண் ஒருவர் தனது மகன், மருமகளுடன் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், கந்து வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், முழு தொகையையும் திருப்பி அளித்தும் மேலும் பணம் கேட்டு ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!
News January 25, 2026
கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் (2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News January 25, 2026
கள்ளக்குறிச்சி: 22 பேருக்கு பாய்ந்த அதிரடி வழக்கு!

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உட்பட 22பேர் மீது சங்கராபுரம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


