News November 20, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

திருக்கோவிலூர் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் னால திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்களின் மீதான நிலை குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் உள்ள நீண்டகால கோப்புகள், தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களின் முக்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த<
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: தகராற்றில் 8 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே சாத்தப்புத்தூரை சேர்ந்த சகோதரர்களான பரசுராமன் அருள் ஆகியோரிடையே சொத்துத் தகராற்றில் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதைத் தொடர்ந்து, இருவரும் அளித்த புகார்களின் பேரில், 8பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பரசுராமன்&அருள் ஆகியோரை கைது செய்தனர்.


