News August 19, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 21.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: பீகார் கொள்ளையர்களால் அதிர்ச்சி!

image

சின்னசேலம்: வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம், பீகாரைச் சேர்ந்த 3 பேர் வீட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கு ஏதும் இல்லாத நிலையில், பக்கத்து வீடான காமராஜ் என்பவரது வீட்டின் மொட்டைமாடி வழியாக உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது காமராஜ் மனைவி கூச்சலிட்டதால், 3 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசையால் முதியவர் தற்கொலை!

image

மணலூர்பேட்டையை சேர்ந்த கண்ணன் (68), தனது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகன் அவரது வயதை காரணம் காட்டி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு முதல் நாளை (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!