News August 23, 2024
கள்ளக்குறிச்சியில் உள்ள ஆலைக்கு விருது

மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை (கள்ளக்குறிச்சி-1) க்கு தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப சங்கம் கூட்டமைப்பின் மூலம் பெங்களூருவில் வெள்ளி விருது வழங்கப்பட்டது. விருதை சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.கண்ணன் பெற்றுக்கொண்டார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜேஷ்நாராயணன் , துணைத்தலைமை இரசாயணர் கணேசன், உதவி பொறியாளர் (மின்) சிவக்குமார் உடனிருந்தனர்.
Similar News
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: HORN அடித்ததற்கு கொலை மிரட்டல்!

தாவடிப்பட்டையைச் சேர்ந்த அப்பாஸ் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.13) பேருந்தில் கரடிசித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஆட்டோ ஓட்டி சென்ற ராஜபாண்டி, சஞ்சய் இருவரும் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பாஸ் Horn அடித்ததற்காக, பேருந்தை மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
3,04,886 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 3,04,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 337 வாக்குசாவடி நிலைய அலுவலர்களும்,34 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 3-வது சுற்றாக பொதுமக்களுக்கு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.


