News August 24, 2025
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு

ராமநாதபுரம் இந்திய அஞ்சல் துறையில் தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படுகிறது.இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டம் செயல்படுகிறது.
Similar News
News January 23, 2026
ராம்நாடு: இலவச வக்கீல் வேண்டுமா? இதை பண்ணுங்க!

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 23, 2026
ராமநாதபுரத்தில் 3 நாள் குடிநீர் வராது!

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள கசிவைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சிகள் மற்றும் திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றிய பகுதிகளில் ஜனவரி வரும் 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. SHARE!
News January 23, 2026
இராமநாதபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் பழைய ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தில் வருகின்ற ஜன 30ம் தேதி விவசாயிகளுக்கு குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் அனைத்து வகையான துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


