News July 16, 2024

கலைஞர் கனவு இல்லத் திட்ட வீடு ஆணை வழங்கிய அமைச்சர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்கள் உட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பழுதுபார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணைகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொள்ளாச்சி எம்பி கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News July 8, 2025

திருப்பூர் திமுகவில் கோஷ்டி பூசல்?

image

திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகர செயலாளராக இருப்பவர், திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். இவர் இரண்டு திமுக வார்டு கழகச் செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இவரை கட்சி பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News July 8, 2025

தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில்!

image

திருப்பூர் தாளக்கரையில் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!