News June 19, 2024
கலந்தாய்வு தாமதம் பெற்றோர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இரண்டு ஷிப்ட் மொத்தம் 4000 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தி முடித்தது போக இன்னும் 1364 இடங்கள் காலியாக உள்ளது. கலந்தாய்வு நடத்த தாமதம் ஏற்படும் சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளதால் உடனடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
தி.மலை: மின் தடையில் உங்க ஏரியா இருக்கா ?

மங்கலம், மன்சுராபாத், அவலூர்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யபட உள்ளது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை ஷேர் செய்யவும்.
News January 19, 2026
தி.மலை பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <
News January 19, 2026
தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


