News June 17, 2024
கறவை மாடுகள் திருடிய 6 பேர் கைது

மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி அங்கப்பனின் 2 கறவை மாடுகளை மர்மநபர்கள் நேற்று திருடி சென்றனர். இது குறித்த புகாரில் மாரண்டஅள்ளி போலீசார் முரளிதாஸ்(22), சக்திவேல்(24), அஜித்(23), தனுஷ்(25), முருகேசன்(44), சேட்டு(26) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கூட்டாக சேர்ந்து பாலக்கோடு பகுதிகளில் கறவை மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 21, 2026
தருமபுரி: விடுமுறைக்கு வந்து பிணமாக திரும்பிய வாலிபர்!

திண்டுக்கல் அடுத்த ரத்தினகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுகன் (21). பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று (ஜன.21) பெங்களூருக்கு புறப்பட்டார். அப்போது தருமபுரி, கொலசனஅள்ளி அருகே சென்றபோது பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானாது. இதில் சுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
தருமபுரியில் துடிதுடித்து பலி!

சிக்கமாரண்டஅள்ளியை சேர்ந்த விவசாயி மாதேசன் (29). இவர் கொலசனஅள்ளி தனியார் கண் மருத்துவமனை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாதேசன், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த மாரண்ட அள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!


