News November 14, 2025
கரூா் மாவட்டத்தில் 6,482 ஆசிரியா் தோ்வு எழுத அனுமதி!

கரூா் மாவட்டத்தில் நாளை நவ 15, 16-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத 6,482 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 15, 2025
குளித்தலையில் மது விற்றவர்கள் அதிரடி கைது!

கரூர்: குளித்தலை கோட்டம் குளித்தலை, நங்கவரம், லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் மது விற்பனை செய்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாப்பாத்தி (64), அய்யர் (55), ஆனந்த் (40), கருப்பசாமி (54), மூர்த்தி(47), பழனிச்சாமி (45), கருப்பன் (35) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் அருகே விபத்து; பெண் படுகாயம்

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் பாலகிருஷ்ணன், செல்வி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லோகேஷ் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேனுடன் மோதியது. இந்த விபத்தில் செல்வி படுகாயமடைந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவத்துக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
கரூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!


