News October 18, 2025
கரூர்: ரேஷன் கடைகள் தற்போது பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்

கரூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
வாலாந்தூரில் வீட்டில் மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 52. இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 7, 2025
கரூர்: புகழூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கரூர் மாவட்டம் புகழூரில் 9 நவம்பர் 2025 ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை TNPL மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் கண் குறைபாடு, பார்வை பிரச்சனை, கண் வலி பரிசோதனை, மருந்துகள் மற்றும் தேவையான கண்ணாடிகள் வழங்கப்படும் .பொதுமக்கள் அனைவரும் இலவசமாக இம்முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளில் நன்மை பெறலாம்
News November 6, 2025
கரூர்: சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 09.11.2025 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை 1) கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பேருந்தும் உள்ளது.


