News April 9, 2024
கரூர்: ரூ.71,000 பறிமுதல் செய்த பறக்கும் படை

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை குழு காவல்காரன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவல்காரன்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாழப்பாடி வட்டம், குள்ளம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ரூ.71,000 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. ஆவணங்களின்றி கொண்டு வந்த, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 8, 2025
பாலவிடுதியில் வசமாக மாட்டிக் கொண்ட பெண்!

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒருவர் விற்பனை செய்வதாக, பாலவிடுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீசார் நேற்று இரவு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது மாரியம்மாள் என்பவர் புகையிலை பொருள்களை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
News December 8, 2025
கரூர் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

கரூர் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 8, 2025
கரூர்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

கரூர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


