News October 1, 2025
கரூர்: மின்சார துறையில் வேலை – ரூ.59,900 வரை சம்பளம்!

கரூர் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <
Similar News
News December 15, 2025
தோகைமலை அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் சுப்பன் மனைவி மாணிக்கம்மாள்(வயது 50). இவர் கொத்தமல்லி மேடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் சோதனை செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய 5 பேர்: அதிரடி கைது

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


