News April 3, 2025

கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Similar News

News January 18, 2026

கரூர்: புதிய VOTER ID விண்ணப்பிப்பது எப்படி?

image

கரூர் மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

அரவக்குறிச்சியில் தொடரும் தடை: களையிழந்த கிராமங்கள்

image

நீதிமன்றத் தடையால் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு, மணல்மேடு
கோவிலுார் பகுதிகளில் புகழ்பெற்ற சேவல் சண்டை இந்தாண்டும் நடைபெறவில்லை. இதனால் வெளிமாநில வர்த்தகம் இன்றி கிராமங்கள் களையிழந்தன. 2014-ல் சேவல் கால்களில் கட்டப் பட்டிருந்த கத்தி பாய்ந்து இருவர் பலியானதால் இத்தடை இன்றும் தொடர்கிறது. இதற்கிடையே தடையை மீறி சண்டை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு,16 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 17, 2026

கரூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

image

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <>இங்கு கிளிக் <<>>செய்து ரிசர்வ் வங்கியில் இணையதளத்தில் புகாரளிக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் புகார் அளிக்க இயலும். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவலை SAVE செய்து மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!