News November 17, 2024

கரூரில் சிறுகுறு தொழில் முனைவோருக்கு லைசன்ஸ்

image

கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர, உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவங்களுக்கு வேண்டிய உத்யோக பதிவு சான்றிதழை மாவட்ட தொழில் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறும் மேலும் தாந்தோணி மலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் மேலும் தகவல்களை கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

கரூர்: 3ம் வகுப்பு மாணவன் முதலிடம்!

image

திருச்சி தனியார் மஹாலில் 16வது தமிழ்நாடு மாநில ஓப்பன் யோகாசன கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டி கலைக்கோவில் யோகாலயம் மற்றும் கலைக்கோவில் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. போட்டியில் இராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் மகன் ராகவன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

News December 7, 2025

கரூர் வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 7, 2025

கரூரில் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி

image

கரூர் வடக்கு பகுதி மீனவர் அணி இணைச் செயலாளராக இருந்த ரமேஷ், மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்களான சுரேஷ், ஆதி, சபீர் அகமது (2வது வார்டு) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்எல் ஏ செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!