News September 28, 2025

கரூரில் சிஎம்., மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (செப்.28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான உதவிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 13, 2025

குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

image

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News November 13, 2025

ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கு பயிற்சி!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

கரூர்: விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் நவம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!