News November 22, 2024

கரூரில் கிராம சபை கூட்டம்-  கலெக்டர் அழைப்பு

image

கரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வரும் 23.11.2024 அன்று காலை 7:00 மணி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சிகளின் நடக்க இருக்கும் பொது பணிகள், சாலை வசதி திட்டம், உயர் கல்வி, மகளிர் சுய உதவி குழு கடன் தொகைகள் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

கரூர் அருகே வசமாக சிக்கிய பெண்!

image

கரூர் பசுபதிபாளையம் கொடியரசு கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானசாமி மனைவி வளர்மதி (62). இவர் அப்பகுதியில் உள்ள வடக்கு தெருவில் முள்ளு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் மது விற்ற வளர்மதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்

News November 17, 2025

கரூரில் சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அடுத்த பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் விஜயகுமார் (65). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற விஜயகுமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

News November 16, 2025

கரூர்: லாட்டரி டிக்கெட் விற்றவர் மீது வழக்கு பதிவு

image

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் சண்முகவேல் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தார். பாலவிடுதி போலீசார் தகவல் அறிந்து, சண்முகவேல் என்பவரிடமிருந்து வெள்ளை தாளில் எழுதப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சண்முகவேல் மீது பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!